பெரிஸில் ஷாருக்கான் உருவம் பொறித்த தங்க நாணயம்

27.07.2024 08:08:00

பெரிஸின் அருங்காட்சியகத்தில், ஷாருக்கானின் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஷாருக்கான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்து வருகிறார்.

2023ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றிபெற்று 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்த நிலையில், அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் இப்போது ஷாருக்கானை பெருமைப்படுத்தும் விதமாக பெரிஸில் உள்ள க்ரவின் மியூசியம் அவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

இந்த பெருமையப் பெரும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது