பராசக்தி படம் இதனாலதான் ஓடல?!

21.07.2026 13:30:49

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதாகொங்கரா இயக்கி சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் உருவான திரைப்படம் பராசக்தி. 1960களில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் பல மாநிலங்களிலும் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருந்தனர்.

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. எனவே இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது..

இந்நிலையில் ‘இந்த படத்தின் தோல்வி குறித்து பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் சென்சாரில் வந்த பிரச்சனைகள் ஆகியவை இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கலாம்.. அல்லது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்திருக்கலாம்..