"புதுப்பேட்டை 2" பற்றி செல்வராகவன்.

20.03.2026 08:06:10

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக படம் இயக்குவதை விட நடிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவர் எப்போது பேட்டி கொடுத்த்தாலும் அவரிடம் ஒரு கேள்வியை தவறாமல் கேட்டுவிடுவார்கள். புதுப்பேட்டை 2 எப்போது என்பது தான் அந்த கேள்வி. அவரும் அதற்கான பணிகளில் இருப்பதாக தொடர்த்து பல வருடங்களாக கூறி வருகிறார்.

இந்நிலையில் தான் புதுப்பேட்டை 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதி முடிந்துவிட்டதாக X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதனால் ரசிகர்கள் நீண்ட நாளாக கேட்டு வரும் விஷயம் நடக்க போகிறது என மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.