ETR.FM

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தாக்குதல்

25.10.2024 08:05 1 நிமிட வாசிப்பு
ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் அருகே இராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் இருவரும், இராணுவ வீரர்கள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்த தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (24) நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, பயங்கவராதிகளுக்கு எதிராக விரைவான மற்றும் தகுந்த பதிலடியை கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்