ETR.FM

4 நாட்களில் செம வசூல் வேட்டையில் டோரதி!

29.09.2026 14:37 1 நிமிட வாசிப்பு
4 நாட்களில் செம வசூல் வேட்டையில் டோரதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் டோரதி. 1990களை பின்னணியாகக் கொண்ட டோரதி படம், இரண்டு ஆண்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருவதால் உருவாகும் உறவுகளை மையமாக கொண்டு உருவானது. வழக்கமான காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்த்த சில ரசிகர்களுக்கு படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

 

இப்படத்திற்கு சர்வதேச விழாவான டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

வித்தியாசமான கதைக்களம் என்பதால் நிறைய ஆதரவும், அதே அளவிற்கு எதிர்ப்பும் படத்திற்கு கிடைக்கிறது.

ஆனால் படத்தின் வசூல் என்னவோ நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. படம் வெளியான 4 நாள் முடிவில் படம் ரூ. 6.8 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்