சர்தார் 2 டீசர் வீடியோ!.

01.08.2026 09:16:17

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து ஏற்கனவே வெளியான சர்தார் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரு இந்திய உளவாளி பற்றிய கதை அது. அந்த படத்தில் இந்திய உளவாழியாக கார்த்தி அசத்தலாக நடித்திருந்தார். முதல் பாகத்திலே அதிரடியான ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்திலும் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா அசத்தலான வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசரில் சூர்யாவும், எஸ்.ஜே சூர்யாவின் வில்லத்தனமும், கார்த்தியின் அசத்தலான ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. டீசரை பார்க்கும்போதே கண்டிப்பாக ஆக்சன் விரும்பிகளுக்கு சர்தார் 2 விருந்தாக அமையும் என கணிக்கப்படுகிறது. சர்தார் 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது.