‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது!
நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ என்ற பெயரில் வெளியாகியுள்ள டீசரில் நயன்தாரா சக்தி வாய்ந்த அம்மன் தோற்றத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், தீபாவளி வெளியீடாக எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.