ETR.FM

இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு!

12.06.2024 07:53 1 நிமிட வாசிப்பு
இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கவுள்ளார்.

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப்  பிடித்தது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்த சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக நான்காவது முறையாக இன்று காலை 11.27 மணிக்கு விஜயவாடாவில் பதவியேற்கவுள்ளார்.

மேலும் துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்க உள்ளார் எனவும் இவர்கள் தவிர மேலும் 26 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்