நடிகர் மம்மூட்டிக்கு 'பத்மபூஷன்' விருது அறிவிப்பு.
26.01.2026 13:00:00
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் கலை, இலக்கியம், பொது சேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பானவர்களை தேர்வு செய்து பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) அறிவிக்கப்பட்ட விருதுகளில் நடிகர்கள் பலருக்கும் விருதுகள் கிடைத்து இருக்கிறது.
இந்நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஹிந்தி நடிகர் தர்மேந்திராவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.