மூக்குத்தி அம்மன் - 2 எப்போது?
27.08.2026 13:03:00
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை மையப்படுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாத பட்சத்தில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலை கருத்தில் கொண்டு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கும் இப்படம் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
மூக்குத்தி அம்மன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முன்னணி OTT தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை, பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை தியேட்டர்களில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது.