ETR.FM

வடிவேல் பாலாஜி குறித்து பேசிய புகழ்

11.09.2021 15:55 1 நிமிட வாசிப்பு
வடிவேல் பாலாஜி குறித்து  பேசிய புகழ்

வடிவேல் பாலாஜி இறந்து ஒரு வருடமாகி விட்ட நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி விஜய் டிவி பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

விஜய் டிவியின் முன்னணி காமெடியனாக வலம் வந்த வடிவேல் பாலாஜி சென்ற வருடம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் மரணமடைந்து ஒருவருடம் ஆகி விட்ட நிலையில், குக் வித் கோமாளி புகழ் அவரை பற்றி மிகவும் எமோஷ்னலானா பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில், "மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். மிஸ் யூ மாமா" என அவர் கூறி உள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்