தங்கலான் பற்றி சிலாகித்துப்போன ஜிவி பிரகாஷ்

02.07.2024 00:50:04

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; தங்கலான் குறித்து ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்திருக்கிறார். சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார். இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். விரைவில் ரிலீஸ்: முதலில் அந்தப் படம் ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மூலம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.