ETR.FM

இளையராஜா இசையில் உருவாகும் ‘மஞ்சணத்தி’.

24.11.2026 08:29 1 நிமிட வாசிப்பு
இளையராஜா இசையில் உருவாகும் ‘மஞ்சணத்தி’.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படம் தனக்கு மிகவும் சிறப்பானது என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். 
படங்களைப்பார்
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், இயக்குநர் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இசைஞானி இளையராஜாவின் இசையைத் தான் மிகவும் விரும்பிக் கேட்பதாகவும், அவர் இசையமைக்கும் திரைப்படத்தில் தானும் ஒரு பகுதியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரியங்கா மோகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பிரியமான தோழி