எகிப்து - கெய்ரோ எரிபொருள் தாங்கி விபத்தில் 31 பேர் உயிரிழப்பு.
26.11.2026
08:32
1 நிமிட வாசிப்பு
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரை சுற்றியுள்ள முக்கிய நெடுஞ்சாலையில் எரிபொருள் தாங்கி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
எகிப்து தலைநகரை சுற்றியுள்ள முக்கிய பாதையான 'ரிங் ரோட்' பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து நடந்த நெடுஞ்சாலை பகுதி, கெய்ரோவின் பெருநகர பகுதியின் ஒரு அங்கமான கிசாவில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் 'வாராக்' என்ற பகுதியில் அமைந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியாளர்கள் தீப்பிடித்த வாகனங்களில் இருந்து மக்களை வெளியேற்றியுள்ளனர்.
எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-பத்தாஹ எல்-சிசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கூறுகையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தானும் சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது கூறப்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை ஆரம்பகட்ட தகவல் மட்டுமே என்றும், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.