ETR.FM

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்.

26.11.2026 08:35 1 நிமிட வாசிப்பு
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்.
ஏமனின் ஹூதிகள் நேற்று (புதன்கிழமை) சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா எனும் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதமடைந்துள்ளது.

நாசா செயற்கைக்கோள்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்திருந்ததைக் காட்டின.

ஹூதிகளின் இந்தத் தாக்குதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 82 டொலராக உயர்ந்துள்ளது.

தாக்கப்பட்ட ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம், சவூதி அரேபிய கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 550,000 பீப்பாய் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

இந்த நிலையம் அதன் உற்பத்தியில் பெரும்பகுதியை ஏற்றுமதி செய்கிறது.

ஹூதி இராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி இந்தத் தாக்குதலில் சுத்திகரிப்பு ஆலை பலத்த சேதமடைந்து தீப்பிடித்ததாகக் கூறினார்.

ஹூதி அரசும் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவும்4 இந்த தாக்குதல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே சவூதி அரேபியா மற்றும் மேற்கத்திய ஆதரவு பெற்ற ஏமன் அரசு செயல்படும் இடைக்கால தலைநகரான ஏடன் நகரை நோக்கி ஹூதிகள் தரைவழியாக முன்னேறி வருகின்றனர்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE உங்கள் விருப்பம்